தருமபுரி பூர்வ சரித்திரம் – D- கோபால செட்டியார்

75.00

தருமபுரி குறித்து 1939இல் எழுதப்பட்ட வரலாற்று நூல் இது.

- +

தருமபுரி குறித்து 1939இல் எழுதப்பட்ட வரலாற்று நூல் இது. இதை எழுதிய டி.கோபால செட்டியார் ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’ போன்ற நூல்களை எழுதியவர். இவரைக் குறித்து கவிஞர் பழமலய் எழுதிய கட்டுரையை முன்னிணைப்பாகச் சேர்த்திருப்பது விசேஷமானது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், கோபால செட்டியாருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்கிற தகவலை இந்தக் கட்டுரை வழி அறிய முடிகிறது. அன்றைய காலகட்ட தருமபுரி குறித்துத் தொடங்கும் இந்நூல், பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் கொங்கு நாட்டின் ஒரு பாகமான தகடூர் நாட்டை ஆண்ட அதியமானைத் தொட்டு நகர்கிறது. இந்தத் தகடூர்தான் இன்று தருமபுரி ஆகியிருக்கிறது என்கிறார். சென்னை மாகாண ஆளுநராகப் பின்னாளில் புகழ்பெற்ற தாமஸ் மன்றோ தருமபுரியில் வருவாய்த் துறையில் பணியாற்றிய அனுபவங்களும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி அருந்தகவல்களின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Scroll to Top